ஏக்கர் வரி


வரியொன்றை விதிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 148 ஆம் யாப்பின் ஊடாக பாராளுமன்றத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள அதிகாரம், சட்டம் ஊடாக பிற ஏதேனும் நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ள அதிகாரத்தின் கீழ், தினந்தோறும் அல்லது நிலையாக மேற்கொள்ளப்படுகின்ற விவசாயத்திற்கு உட்பட்ட காணிகளுக்கு குறித்துரைக்கப்பட்டு அறவிடப்படுகின்ற வரியாகும். பிரதேச சபைகளுக்கு மாத்திரமே ஏக்கர் வரி அறவிடுவதற்கு அதிகாரமுண்டு. இது ஏக்கர் வரி என அழைக்கப்படுகின்றது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

(அ) பிரதேச சபையினால் வழங்கப்பட்ட சரிபார்த்தல் அறிவித்தல். 

(ஆ) சரிபார்த்தல் அறிவித்தல் இல்லாத ஏதேனும் சந்தர்ப்பத்தில், உரிய காணியின் அமைவிடத்தை (வீதி மற்றும் விலாசம்) குறிப்பிட்டு இந்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு முன் அலுவலக உத்தியோகத்தருக்கு வசதியாக அமையும். 

செலுத்த வேண்டிய கட்டணம்

சொத்தின் உரிமையாளர் அல்லது உரிமையாளருக்கு வழங்கப்பட்ட ஏக்கர் சரிபார்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட தொகை செலுத்தப்படவேண்டும். 

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்  

1.உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

2.விடய உத்தியோகத்தர்  

3.வருமான பரிசோதகர்

சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை 

அனைத்து தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டால்   உடனடியாக

Loading

Translate »