களியாட்ட வரி
ஒரு குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்திற்குள் நடக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி செலுத்த வேண்டும். இந்த வரி அனைத்து பொது நிகழ்ச்சிகளின் டிக்கெட்டுகளின் விலையில் உள்ளடக்;கப்பட்டுள்ளது மற்றும் இது மத, கல்வி மற்றும் தொண்டு நிகழ்ச்சிகள் தவிர அனைத்து பொது நிகழ்ச்சிகளிலிருந்தும் வசூலிக்கப்படுகிறது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
1. விண்ணப்பப்படிவம்
2.வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பெறுமதியிலான அச்சிடப்பட்ட நுழைவுச்சீட்டுகள் மற்றும் இணையம் ஊடாக வழங்குவதற்கு உத்தேசித்துள்ள இலத்திரனியல் நுழைவுச்சீட்டுகளின் பெறுமதி மற்றும் எண்ணிக்கைகளுடன் சபையின் இலத்திரனியல் முத்திரையிடலை இலகுப்படுத்த தேவையான கடவுச்சொற்களை அலுவலக முன் காரியாலயத்திற்கு வழங்கல்.
செலுத்த வேண்டிய கட்டணம்
கேளிக்கை வரிக் கட்டணத் தொகையை சபைத்; தீர்மானமாக நிறைவேற்றி, அமைச்சரின் அனுமதி பெற்று வர்த்தமானி பத்திரிகையில் அறிவித்தல் வெளியிட வேண்டும்.
கேளிக்கை வரி வெவ்வேறு தொகைகளுக்கு வெவ்வேறு விகிதங்களில் விதிக்கப்படலாம், ஆனால் விகிதம் ஐந்து சதவீதத்திற்கு குறைவாகவோ அல்லது தொகையில் இருபத்தைந்து சதவீதத்திற்கு அதிகமாகவோ இருக்கக்கூடாது.
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்
1.உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்
2. விடய உத்தியோகத்தர்
3. வருமான பரிசோதகர்
சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
அனைத்து தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டால் 2-3 நாட்களில்
விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக.