திட்டமிடல் பகுதி

திட்டமிடற் பிரிவானது நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.சீரலாதன் அவர்களின் தலைமையிலும், நேரடிக் கண்காணிப்பின் கீழும் தனது சிறந்த சேவையினை ஆற்றிவருகின்றது. திட்டமிடல் பகுதியின் கீழ் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், நலன்புரிச் சேவைகள், ஆளணி வளம், புள்ளிவிபரங்கள் சேகரித்தல், பௌதிக திட்டமிடல், பொதுசன தொடர்பு, சட்ட நடவடிக்கைகள், காணி போன்ற பணிகளை மேற்கொள்கின்றது.

இப்பிரிவில் தற்போது பணியாற்றுவோர் விபரம்:

  1. திருமதி.டி.சோதிமலர் – நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்கள்
  2. செல்வி.பி.தயாலினி -அபிவிருத்தி உத்தியோகத்தர்
  3. திருமதி.கே.ஜீவிதா –அபிவிருத்தி உத்தியோகத்தர்

வவுனியா நகர சபையின் திட்டமிடற்பிரிவின் முதற்படியாக பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தரின் செயற்பாடு மிக உன்னதமான முறையில் இடம்பெற்று வருகின்றது.

1. பொதுசனத் தொடர்பு :-

வவுனியா நகரசபையில் பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் நகர சபையின் சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளவும், நகர சபை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் கருமபீடம் அமைக்கப்பட்டு இற்றைவரை இந்நடவடிக்கை தொடர்கின்றது. மேலும் முறைப்பாடுகளுக்கென தனியான பதிவேடு பேணப்படுகின்றது. பொதுமக்கள் தமது அபிப்பிராயங்களையும் முறைப்பாடுகளையும் நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ செய்யக்கூடியதாக இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அபிப்பிராயங்களை ஏற்றுக்கொள்வதற்கான அபிப்பிராயப்பெட்டியும் காணப்படுகின்றது.

2. அலுவலக பௌதிக திட்டமிடல்.

அடுத்த படியாக பௌதிக திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகளால் பொதுமக்களிற்கு மிகவும் சிறந்த முறையில் சேவைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இவர்களின் சேவைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம் :-

 வேலைப் பகுதியுடன் இணைந்து பௌதிக வளங்களை அமைத்தல், பராமரித்தல் போன்ற அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்கின்றது.
 சபை நிதி மூலமும், ஏனைய நிதி மூலங்களினாலும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 வருடாவருடம் நிர்வாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.
 மக்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில்  சமர்ப்பிக்கப்படும் ஆதனங்கள் பெயர்மாற்றும் நடவடிக்கைகள், கட்டிட அனுமதிகள் வழங்கும் செயற்பாடுகள் போன்றன மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
 உத்தியோகத்தர்களிற்கான பயிற்சிநெறிகள் தொடர்பான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டடுவருகின்றன.
 சபைக்குச் சொந்தமான பொது நூலகத்தின் மேலதிக செயற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
 எமது சமூகத்தினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சனசமூக நிலையங்களின் மேலதிக செயற்பாடுகளில் ஈடுபடுதல். இதற்காக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரும் எம்முடன் இணைந்து செயற்பட்டுவருகின்றார்.
 உள்ளூராட்சி வார நிகழ்வுகளை ஏற்று நடாத்தல்.

3. சுற்றுச்சூழல்

வவுனியா நகரசபை திட்டமிடல் பிரிவினருடன் இணைந்து சுற்றுச்சூழல் நடவடிக்கைகளும் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்று வருகின்றது.வவுனியா நகரசபையின் சுற்றுச்சூழல் பிரிவானது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார பரிசோதகர்களுடனும் சமுதாய மருத்துவத்துறையினருடனும் இணைந்து சுகாதார செயற்பாடுகளையும் பிரதேச செயலகம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பரிந்துரைகளுடனும் சிபாரிசுகளுடனும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளையும் நிறைவேற்றி வருகின்றது. மேலும் UNDP நிறுவனம், சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், அரச கூட்டுத்தாபனம், அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் என்பவற்றின் உதவியுடன் திண்மக்கழிவு முகாமைத்துவம், மரம்நடுகை, டெங்கு நோய் ஒழிப்பு போன்ற விசேட செயற்றிட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் சுற்றாடல், சுகாதாரம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகளையும் இப்பகுதி மேற்கொள்கின்றது.

இப்பகுதியினரால் ஆற்றப்படும் சேவைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

அ. துப்பரவுப் பணிகள் :-
 சந்தைகள்
 வீதிகள்
 வடிகால்கள்
ஆ. சிரமதானப் பணிகள்
இ. சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்ககைள்
ஈ. உணவகங்களுக்கான மருத்துவப்பரிசோதனை சான்றிதழ் வழங்கல்
உ. திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்
ஊ. டெங்குச் செயற்பாடுகளில் ஈடுபடுதல்
எ. மரம் நடுகைத் திட்டத்தினை மேற்கொள்ளல்
ஏ. நலன்புரிச் சேவைகளை மேற்கொள்ளல்

Loading

Translate »