சுற்றுச்சூழல் உரிமம் வழங்குதல்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் என்பது 1980 இன் 47 இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்ட விதிகளின் கீழ் ஒரு ஒழுங்குமுறைசட்ட கருவியாகும். தேசிய சுற்றாடல் அதிகாரசபையின்  இன் பிரிவு 23யு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தினை பெற்றுக்கொள்ளாத, எந்தவொரு நபரும் பரிந்துரைக்கப்பட்ட செயற்பாடுகளை தவிர்ந்த எந்தவொரு செயற்பாடுகளையும் செயற்படுத்தல்கூடாது என்று கூறுகிறது. அதாவது கழிவுகளை வெளியேற்றுவதற்கு, கழிவுகளை சேமித்து வைத்தல், புகை, வாயுக்கள், புகை, நீராவி அல்லது அதிகப்படியான சத்தம் ஃ அதிர்வுகளை சுற்றுச்சூழலில் வெளியிடுவது போன்ற செயற்பாடுகளை செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அவசியமாகும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

 பூரணப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிம விண்ணப்பப் படிவம்

தொழில் அல்லது வணிகத்தின் இருப்பிடத்தைக் குறிக்கும் வீதியின் படம்

 நடப்பாண்டுக்குரிய வியாபார அனுமதிப்பத்திரம் (புதிதாக சேர்க்கப்பட்டது)

 வியாபார பதிவு சான்றிதழ்.

 கட்டிடம் ஃ தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மற்றும் இணக்கச் சான்றிதழ்

 குறித்த காணிக்கான உறுதிப்பிரதி (புதிதாக சேர்க்கப்பட்டது)

 நில அளவைப்படம்

 வாடகைஃ குத்தகை ஒப்பந்த பிரதி தேவையேற்படின். (புதிதாக சேர்க்கப்பட்டது)

 மாசுபாட்டைக் குறைப்பதற்கான முன்மொழிவு.

செலுத்த வேண்டிய கட்டணம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமக் கட்டணம் ரூ. 4,500.00 ஆகும்

பரிசீலனைக் கட்டணங்கள் முதலீட்டின் அடிப்படையில் பின்வருமாறு இருக்கும்;

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

தேசிய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் உத்தியோகத்தார்

தொழில்நுட்ப உத்தியோகத்தர்

விடய உத்தியோகத்தர்

சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை

7- 10 நாட்கள்

புதிய தொழிலுக்கான விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக.

உரிமத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக.

Loading

Translate »