பொது நிகழ்வுகளுக்கான அனுமதி வழங்குதல்
எந்தவொரு பொது இடத்திலும் நாடாத்தப்படுகின்ற கலை நிகழ்சிகள் அல்லது திருவிழாவை காணவரும் பொதுமக்களின் உடல்நலம், சுகாதாரம் வசதி மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்த பிறகு, அத்தகைய கலை நிகழ்ச்சிகள் அல்லது திருவிழாவை நடத்த உள்ளூர் அதிகார சபை வழங்கிய சான்றிதழானது ‘அனுமதிப் பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
.விண்ணப்பப்படிவம்.
•A4 அளவிலான கடதாசியில் வரையப்பட்ட, திருவிழாவின் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து அம்சங்களும் காட்டப்படும் உரிய வளாகத்தின் அண்ணளவான வரைபடம்.
•அந்த இடத்தில் கூடியிருக்கும் பொதுமக்களுக்குப் போதுமான கழிப்பறை வசதிகள் (ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எனத் தனித்தனியாக) வழங்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துதல்.
•அந்த தளத்தில் கட்டப்பட்ட தற்காலிக கட்டிடங்கள் போதுமான பலம் கொண்டவை என்பதை உறுதிப்படுத்தல்.
•பொதுமக்களுக்கு தங்குதடையற்ற போதுமான காற்றோட்ட வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
•அவசரகால தீ விபத்தின்போது தீயை அணைப்பதற்காக கருவிகளை (சாதாரண தீ அணைக்கும் கருவிகள், மின்சார தீ அணைக்கும் கருவிகள் மற்றும் எரிபொருள் தீ அணைக்கும் கருவிகள்) பயன்படுத்தத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
•அனர்த்தங்கள் ஏற்பட்டால், கூடியிருக்கின்ற மக்களை மிகக் குறுகிய காலத்திற்குள் வெளியேற்றுவதற்குப் போதுமான வெளியேறும் வாயில்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
செலுத்த வேண்டிய கட்டணம்
உள்ளூராட்சி மன்றத்தினால் காலத்திற்குக் காலம் நிர்ணயிக்கப்படுகின்ற அனுமதிக் கட்டணங்கள் செலுத்தப்படுதல் வேண்டும்.
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்
உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்
பொது சுகாதார பரிசோதகர்
விடய உத்தியோகத்தர்
தொழில்நுட்ப உத்தியோகத்தர்
சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
2-5 நாட்கள்
விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக.