ஆதன உரிமை மாற்றம்
ஒரு குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்ற எல்லைக்குள் உள்ள அனைத்து நிலம் மற்றும் கட்டிடங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் உள்ளூராட்சி மன்றத்தில் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். நிலம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் உள்ளூராட்சி மன்றத்தில் பதிவு செய்யப்படுவதும் கட்டாயமாகும். பின்வரும் காரணங்களுக்காக நிலம் மற்றும் ஆதனத்தின் உரிமையைப் பதிவு செய்வது முக்கியம்;
1. ஆதன வரியின் நோக்கத்திற்காக உள்ளூராட்சிமன்றம் தனது பகுதிக்குள் உள்ள
சொத்து பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கு.
2. பதிவு இல்லாத பட்சத்தில் நிலத்தின் உபபிரிவிடல் மற்றும் நில அபிவிருத்திக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது.
3. பதிவு இல்லாத நிலையில் கட்டிட அனுமதி வழங்கப்படமாட்டாது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
விண்ணப்பப்படிவம்
01.விண்ணப்பதாரியின் கோரிக்கைக்கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
02. பெயர்மாற்ற விண்ணப்பம் பிரசித்த நொத்தாரிசினால் பூரணப்படுத்தப்பட்டு ஒப்பந்தத்துடன் திகதி, பதவி, இலச்சினை பொறிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
3. ஆதனத்தின் உறுதிகள்
4. விண்ணப்பதாரியின் உறுதியில் பெயர்கள் வேறுபாடு இருந்தால் சத்தியக் கடதாசியின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
5. சொரியல் காணியாக இருப்பின் பிரிவிடுதல் உறுதி மூலம் அல்லது நீதிமன்ற அனுமதியுடனான உறுதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
6. குறித்த ஆவணத்திற்கான நிலஅளவைப்பட பிரதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
7. 1986ற்கு பின்னர் காணி உபபிரிவிடுகை செய்யப்பட்டிருந்தால் திட்டமிடல் பிரிவினாரால் அங்கீகரிக்கப்பட்ட நில அளவைப்படம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
8. தேவையான சந்தர்ப்பத்தில் பிறப்புச்சான்றிதழும், அடையாள அட்டையின் மூலப்பிரதியும், நிழற்பிரதியும்.
9. உரிய சொத்தின் உரிமையானது பிரிப்பு வழக்கில் கிடைக்கப்பெற்றிருந்தால், நீதிமன்ற தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட இரண்டு பிரதியை உறுதி சாராம்சத்தின் பிரதிகளுடன் சமர்ப்பித்திருத்தல் வேண்டும்.
செலுத்த வேண்டிய கட்டணம்
விண்ணப்பப் படிவம் மற்றும் செயன்முறைக் கட்டணங்கள்
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்
1.உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்
2.விடய உத்தியோகத்தர்
3.வருமான பரிசோதகர்
சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
4-14 நாட்கள்