தற்போது மழைகாலத்தினை முன்னிட்டு வெள்ளநீர் வடிகாலமைப்பு சுத்திகரிப்பு பணிகள் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..
பொதுமக்களாகிய நீங்களும் இப்பணியில் பங்கெடுத்து தங்களது வீதியின் காண்களை பராமரித்து எதிர்வரும் மழைகாலத்தின் போதான வெள்ள நீர் அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டு நிற்கின்றோம்.
——————————********——————————
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நகரசபையின் கீழ் இயங்கும் சனசமூக நிலையங்களுக்கிடையே கீழ்க்குறிப்பிடப்படும் விளையாட்டுக்களை நடாத்துவதற்கு நகரசபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமையால், நகரசபையின் கீழ் இயங்கும் சனசமூக நிலையங்கள் தாங்கள் பங்கு பெற விரும்பும் விளையாட்டுக்கள் தொடர்பான விருப்பத் தெரிவினை கீழ்க்குறிப்பிடப்படும் கூகிள் படிவத்தினை (Google Form) எதிர்வரும் 25.10.2023 ஆம் திகதிக்கு முன்னதாக பூரணப்படுத்தி Submit செய்வதன் மூலம் எமக்கு தெரியப்படுத்த முடியும்.
https://docs.google.com/…/1FAIpQLSdO_MJWA4rSgD…/viewform
அல்லாது விடின் http://vavuniya.uc.gov.lk என்ற இணையத்தள பக்கத்தில் Online Service ஊடாக பதிவுசெய்யமுடியும்.
மேலதிக விபரங்களுக்கு
024-2222275
செயலாளர்,
நகரசபை,
வவுனியா
நகரசபைக்கு சொந்தமான மணிக்கூட்டு கோபுரச் சந்திக்கு அருகாமையில் உள்ள ஆதனத்தின் முன் பகுதியில் சிலைகள் அமைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சபை தீர்மானத்தின் அடிப்படையில் கீழ்க்குறிப்படப்படும் விண்ணப்பதாரிகளினால் சிலை அமைத்தலுக்கான விண்ணப்பங்கள் நகரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
01. திரு.க.சந்திரகுலசிங்கம்-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி- மாவட்ட அமைப்பாளர்-தோழர்.க. உமாமகேஸ்வரன் சிலை அமைத்தல் (விண்ணப்ப திகதி-27.09.2023)
02. திரு.ந.சிவசக்தி ஆனந்தன்- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- செயலாளர்- தோழர்.க.பத்மநாபா சிலை அமைத்தல் (விண்ணப்ப திகதி-25.09.2023)
03. திரு.செல்வம் அடைக்கலநாதன் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- தலைவர் அமரர்.சிறிசபாரத்தினம் சிலை அமைத்தல் (விண்ணப்ப திகதி-22.09.2023)
உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிலை அமைப்பதலுக்கான அனுமதி பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் போது உள்ளூராட்சி மன்றங்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்கு ஏதுவாக மேற்குறித்த இடத்தில் மேற்குறித்த சிலைகள் அமைத்தல் தொடர்பாக 10.10.2023 ஆம் திகதிய வீரகேசரி மற்றும் தினமின பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதுடன், இச்சிலைகள் அமைப்பதற்கு ஆட்சேபனைகள் இருப்பின் 27.10.2023 ஆம் திகதிக்கு முன்னர் ‘செயலாளர், நகரசபை, வவுனியா” எனும் முகவரிக்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
செயலாளர்
நகர சபை வவுனியா
அண்மைக்காலமாக எமது பிரதேசங்களில் இரவு மற்றும் பகல் வேளைகளில் வீதிகளில் நடமாடும் கால்நடைகள் காரணமாக அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமையினால் விலை மதிப்பற்ற மனித உயிர்களும் கால்நடைகளும் காவு கொள்ளப்படுவது மிகவும் வருந்தத்தக்க
விடயமாகும். வவுனியா மாவட்டத்தில் கட்டாக்காலி கால்நடைகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பல விபத்துக்கள் அதிகளவு இடம்பெறுவதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வரும் நிலையில் நகர சபைக்கு உரித்தாக்கப்பட்ட அதிகாரங்களை
கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆகவே, கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை உரிய வகையில் பராமரிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இவ்வாறான கால்நடைகளை கட்டுப்படுத்தும் நகர சபையின்
நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவ்வாறு இரவு வேளைகளில் நடமாடும் கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்படும் பட்சத்தில் இதற்கான தண்டப்பணம் மற்றும் பராமரிப்புச்செலவு
என்பன விதிக்கப்படும் என்பதுடன், கால்நடை உரிமையாளர்கள் கட்டணங்களை செலுத்தி உரிய காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளத்தவறின் குறித்த கால்நடைகள் ஏல விற்பனை மூலம்
விற்பனை செய்யப்படும் என்பதனையும் மன வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
கட்டண விபரம் வருமாறு: –
கட்டாக்காலி மாடு பிடி கூலி ரூபா 1,000.00
தண்டம் ரூபா 1,000.00
நாளொன்றிக்கான பராமரிப்புச்செலவு ரூபா 500.00
இன்றைய தினம் (2023-09-22) 2022ம் ஆண்டுக்கான கணக்கறிக்கையிடல் விருதுவழங்கும் நிகழ்வு அனுராதபுரத்திலுள்ள வட மத்திய மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் எமது சபைக்கு வெண்கல விருது கிடைக்கப்பெற்றமையினை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதற்காக கடுமையாக உழைத்த அனைத்து அலுவலர்களுக்கும் எமது சபை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகவங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் (LDSP) திட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் 2024 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைகள் பொதுமக்களின் பங்களிப்புடன் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
வடமாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் பொதுமக்கள் தமது கருத்துக்களை நேரடியாக வழங்குவதற்கு பின்வரும் இரு தினங்கள் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
1வது கூட்டம் : 25.09.2023(திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணி
2வது கூட்டம் : 30.09.2023(சனிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி
இக்காலப்பகுதியில் மீளாய்வு செய்யப்படவுள்ள திட்டங்கள் பொதுமக்களின் பார்வைக்காக உள்ளூராட்சி மன்றங்களின் உப அலுவலகங்கள் மற்றும் நூலகங்களில் காட்சிப்படுத்தப்படும். அவற்றினை பார்த்து பொதுமக்கள் தமது கருத்துக்களை எழுத்துமூலமாகவும் உரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கமுடியும்.
இறுதி செய்வதற்கான கூட்டம் : 06.10.2023(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி