பொதுச்சந்தை கட்டட தொகுதியினை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம்

“Clean Sri Lanka” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக இன்றையதினம் வவுனியா பொதுச்சந்தை கட்டடத்தொகுதியானது மக்களின் சுகாதாரமான பாவனையினை நோக்காக கொண்டு விசேட தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன் போது குறித்த கட்டடத்தொகுதியானது முழுமையாக சுத்தம் செய்யப்பட்டதுடன், தேவையற்ற வகையில் காணப்பட்ட கழிவுகள் அனைத்தும் இன்றையதினம் அகற்றப்பட்டது.
தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு விழா- 2024

நகரசபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு விழா 30.11.2024 சனிக்கிழமை, மு.ப. 9.00 மணிக்கு நகரசபை கலாசார மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது. இந் நிகழ்வானது சபையில் செயலாளர் திரு. அ.பாலகிருபன் அவர்கள் தலைமையில். பிரதமவிருந்தினராக திரு. இ. பிரதாபன் (பிரதேச செயலாளர்- வவுனியா) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. தெ. ரதீஸ்வரன் (உள்ளூராட்சி உதவி ஆணையாளர்- வவுனியா) அவா்களும், ஏனைய சபைகளின் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், வாசகர்கள், மற்றும் பெற்றோர், மாணவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டம் பொது மக்களின் பார்வைக்கு

வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டமானது 02.12.2024 ஆம் திகதியிலிருந்து 11.12.2024 ஆம் திகதி வரை நகர சபை அலுவலகம், பொது நூலகம் மற்றும் சன சமூக நிலையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வரவு செலவு திட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்காக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சபைக்குரிய வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால், பொது மக்களாகிய நீங்கள் இவ் வரவு செலவு திட்டத்தினை அலுவலக நாட்களில் பார்வையிட்டு தங்களது அபிப்பிராயங்களை
செயலாளர்
நகர சபை
வவுனியா
எனும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ 12.12.2024 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவிக்க இயலும் என்பதனை அறியத்தருகின்றோம்.
வரவு செலவு திட்டத்தினை PDF வடிவில் கீழ்வரும் இணைப்பினை தொடர்வதன் மூலம் மும்மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
————————————————————————-

வருமானம் (ரூபா.)
**************
சபையின் சொந்த வருமானம் 195,842,934.64
நன்கொடைகள் மற்றும் வருமான மீள் நிரம்பல்கள் 132,668,043.00
மூலதன பெறுகைகள் 5,000,000.00
எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம் 333,510,977.64

செலவீனம் (ரூபா.)
**************
மீண்டெழும் செலவுகள் 281,360,615.00
மூலதன செலவுகள் 52,150,000.00
எதிர்பார்க்கப்படும் மொத்த செலவீனம் 333,510,615.00
வவுனியா நகரசபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு நிகழ்வு – 2024.11.30
வாசகர்கள் , மாணவர்கள், மற்றும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.
சீரற்ற காலநிலை தொடர்பான முக்கிய அறிவித்தல்
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதற்கும் துரித நடவடிக்கைகளை எடுக்கத்தக்கவாறு வவுனியா நகர சபையானது 24 மணி நேர சேவையினை வழங்குவதற்கு ஏற்றவாறு தயார்நிலையில் உள்ளது.
அந்தவகையில் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பொது பாதைகளை தடை செய்யக்கூடியவாறு ஏற்படும் வெள்ளம் மற்றும் பொது மக்களின் பயணங்களுக்கு இடையூறாக வீதிகளில் விழும் மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இவ்வாறாக அனர்த்தங்கள் ஏற்படுமிடத்து நகர சபையின் பின்வரும் தொடர்பு இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தொடர்புகளுக்கு :- 024-2225555
077 7785924
செயலாளர்
வவுனியா நகர சபை