கழிவகற்றல் சேவை

தங்களது பிரதேசத்திற்கு மாநகர சபையினால் வழங்கப்பட்ட கழிவகற்றல் அட்டவணையின் பிரகாரம் மேற்படி கழிவுகளை நீங்கள் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றும் வாகனத்தில் கையளிக்கலாம். பச்சை நிற கொள்கலன் - உக்கக்கூடிய கழிவுகள் உதாரணம் : சமையல் கழிவுகள், தோட்டக்கழிவுகள் போன்றன... செம்மஞ்சள் நிற கொள்கலன் - உக்காத கழிவுகள் உதாரணம் : பிளாஸ்ரிக் பொருட்கள், பொலித்தீன் பை; போன்றன... நீல நிற கொள்கலன் -  காகிதக் கழிவுகள்                                                                              உதாரணம் : பத்திரிகை, கடதாசி, காகித மட்டை; போன்றன... சிவப்பு நிற கொள்கலன் - கண்ணாடிக் கழிவுகள் உதாரணம் : போத்தல்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் ; போன்றன

நடமாடும் நூலக சேவை

பொதுநூலகம் நகரசபை வவுனியாவின் தேசிய வாசிப்பு மாத முன்னோடி நிகழ்வுகளின் ஒழுங்கில் 24.07.2023, 26.07.2023, 27.07.2023, 12.08.2023 ஆகிய தினங்களில் நூலக நடமாடும் சேவை நடாத்தப்பட்டதுடன். மாணவர்களும் ஆசிரியரும் மிகுந்த ஆர்வத்துடனும், விருப்புடனும் நூல்களை பயன்படுத்தினர்.  

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வவுனியா நகரசபை ”பொதுநூலகமும் , பண்டாரவன்னியன் புத்தக சாலையினரும்” இணைந்து நடாத்தும் ” ஈழத்து எழுத்தளர்களின் நூற்கண்காட்சி” யும் விற்பனையும். 2023.09.09 , 10 ம் திகதிகளில் நடைபெற உள்ளது.

முன்பள்ளி பாடசாலைகளுக்கான சத்துணவு வழங்குதல்

உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் செயற்றிறன் பரிமாற்ற 2ம் கட்ட நிதி ஊடான முக்கிய வேலைத்திட்டங்களில் ஒன்றாக எமது வவுனியா நகரசபைக்குட்பட்ட முன்பள்ளி சிறார்களின் போசணை மட்டத்தினை அதிகரிக்கும் செயற்றிட்டமானது 2023 வைகாசி மாதம் முதல் 60 பாடசாலை நாட்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கலாசார மண்டபம் வுவுனியா நகர சபை

தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ரூபா 47.8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் '' வடக்கு கிழக்கு சமுதாய மீளமைப்பு அபிவிருத்தி திட்டத்தின்'' மூலம் வவுனியா நகர சபை கலாசார மண்டபமானது நிர்மாணிக்கப்பட்டு 2009 ஆண்டு பங்குனி மாதம் 12 ஆம் திகதி பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு தற்போது  தற்போது பொது மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

திறந்தவெளி அரங்கு

உள்ளூராட்சி உதவி அபிவிருத்தி திட்டத்தின் 7.61 ரூபா நிதியீட்டத்தின் கீழ் வருமான மேம்படுத்தல் மற்றும் திறந்த வெளியில் நிகழ்வுகளை ஒழங்கமைப்பதற்கான வசதிகளை வழங்குவதற்காக வவுனியா நகர சபையின் பொதுப்பூங்கா வளாகத்தின் ஒரு பகுதியில் 2022 ஆம் காலப்பகுதியல் நிர்மாணிக்கப்பட்டு தற்போது பொது மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது

கடலுணவுகள் மற்றும் விற்பனை இறைச்சி சந்தை கட்டடத்தொகுதி

வவுனியா நகர மத்தியில் கடலுணவு மற்றும் இறைச்சி ஆகிய இரு வேறுபட்ட உற்பத்திகளை விற்பனை செய்யும் வகைப்படுத்தலின் கீழ் உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின்  8.9 மில்லியன் நிதியீட்டத்தின்  மூலம் 6 கடைத்தொகுதிகள் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டன. தற்போது வருடாந்த திறந்த கேள்வி கோரல் மூலம் உள்ளூர் விற்பனையாளர்களுக்கு கடைகள் கையளிக்கப்பட்டு குறித்த சந்தையானது வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. எதிர்கால தேவை கருதி குறித்த சந்தை கட்டடத்தொகுதியானது விஸ்தரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Translate »