வவுனியா நகர சபையின் வைரவபுளியங்குளம் நடமாடும் சேவை – 31.07.2024

வவுனியா நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே வருகை தந்து வழங்கும் நோக்கில் வைரவபுளியங்குளம் வட்டார மக்களுக்கான நடமாடும் சேவையானது நகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. குறித்த நடமாடும் சேவையானது 31.07.2024 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு குறிப்பாக இவ்வாண்டிற்கான ஆதன வரி அறவீடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள், நகர சபைக்கு சொந்தமான வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், சேதனப் பசளை விற்பனை ( கிலோ – ரூ.25.00 ), கழிவகற்றும் சேவைகள் மற்றும் மீள் சுழற்சிக்கான கழிவுப்பொருள் கொள்வனவு உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஆதன வரியினை செலுத்தாதோர் ஆதன வரியினை முழுமையாக செலுத்தி கழிவுகளை பெற்றுக்கொள்வதுடன், எமது வட்டாரத்தின் அபிவிருத்திக்கு தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்குவதற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
மேற்படி நடமாடும் சேவையுடன் இணைந்தவாறாக 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடலும் முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளமையினால் வைரவபுளியங்குளம் வட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்துகொண்டு வட்டார அபிவிருத்திக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வவுனியா நகர சபையின் பண்டாரிகுளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 26.06.2024

வவுனியா நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே வருகை தந்து வழங்கும் நோக்கில் பண்டாரிகுளம் வட்டார மக்களுக்கான நடமாடும் சேவையானது நகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. குறித்த நடமாடும் சேவையானது 26.06.2024 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை பண்டாரிகுளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு குறிப்பாக இவ்வாண்டிற்கான ஆதன வரி அறவீடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள், நகர சபைக்கு சொந்தமான வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், சேதனப் பசளை விற்பனை ( கிலோ – ரூ.25.00 ), கழிவகற்றும் சேவைகள் மற்றும் மீள் சுழற்சிக்கான கழிவுப்பொருள் கொள்வனவு உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஆதன வரியினை செலுத்தாதோர் ஆதன வரியினை முழுமையாக செலுத்தி கழிவுகளை பெற்றுக்கொள்வதுடன், எமது வட்டாரத்தின் அபிவிருத்திக்கு தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்குவதற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

வவுனியா நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கோவில்குளம் – வட்டாரம் 10 இற்கான நடமாடும் சேவை – 29.05.2024

வவுனியா நகர சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான நான்காவது நடமாடும் சேவையானது கோவில்குளம் துர்க்கா சனசமூக நிலையத்தில் 29.05.2024 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை வவுனியா நகர சபையினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.குறித்த நடமாடும் சேவையில் நகர சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.குறித்த தினத்தில் நகர சபையினால் வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், வடிகாலமைப்பு சுத்திகரிப்பு வேலைகள், நீரிணைப்பு சேவைகள், கழிவற்றல் சேவைகள், சேதன பசளை விற்பனை, வியாபார உரிமம் வழங்குதல், முச்சக்கர வண்டி உரிமம் வழங்குதல், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல், ஆதன பெயர் மாற்று சேவைகள், ஆதன வரியினை செலுத்துதல், விளம்பர அனுமதிகள், கட்டட அனுமதி வழங்குதல், காணி உப பிரிவிடுகை, நகர சபை பொது சுகாதார பரிசோதகர்களின் சுகாதார ஆலோசனைகள், நாய்ப்பட்டி வழங்குதல், நகர சபைக்கு உரித்தான முறைப்பாடுகளுக்கான தீர்வு வழங்குதல் உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தினத்தில் வருகை தந்த பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, நகர சபையினால், மருதங்குளம் 1ஆம் ஒழுங்கை வீதி திருத்த வேலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும், வீதி விளக்குகளை திருத்தம் செய்வதற்கான கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டதற்கமைவாக, குறித்த தினத்திலேயே 8 வீதி விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து 05 கோரிக்கைகள் கிடைக்கப்பெற்று தற்போது தொடர் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
குறித்த நடமாடும் சேவையின் போது 3 கழிவகற்றல் வாகனங்கள் திண்ம கழிவகற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும், விவசாய நடவடிக்கைகளுக்காக நகர சபையால் தயாரிக்கப்பட்ட 170 கிலோ சேதன பசளையானது குறைந்த விலைக்கு (ரூ.25.00 ) பொது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்ற 28 வியாபார உரிமங்களுக்கான விண்ணப்பங்கள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தது.
நூலக சேவையினை விரிவாக்கும் நோக்கில் 8 நூலக அங்கத்துவ விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு நூலக அங்கத்துவ அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவை நிறைவின் போது 45 இற்கும் அதிகமான பொது மக்கள் வருகை தந்து நகர சபையின் சேவைகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றிருந்த பெரும்பான்மையான கோரிக்கைகள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டது.
வவுனியா நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான நான்காவது நடமாடும் சேவையினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு எம்முடன் கைகோர்த்து நின்ற மக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான நடமாடும் சேவைகள் ஏனைய வட்டாரங்களிலும் நடாத்தப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதுடன், நகர சபையின் சேவைகளை திறன்பட வழங்குவதற்கு தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும், பங்களிப்பினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

வவுனியா நகர சபையின் கோவில்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 29.05.2024

வவுனியா நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே வருகை தந்து வழங்கும் நோக்கில் கோவில்குளம் வட்டார மக்களுக்கான நடமாடும் சேவையானது நகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. குறித்த நடமாடும் சேவையானது 29.05.2024 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை கோவில்குளம் துர்க்கா சனசமூக நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு குறிப்பாக இவ்வாண்டிற்கான ஆதன வரி அறவீடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள், நகர சபைக்கு சொந்தமான வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், சேதனப் பசளை விற்பனை ( கிலோ – ரூ.25.00 ), கழிவகற்றும் சேவைகள் மற்றும் மீள் சுழற்சிக்கான கழிவுப்பொருள் கொள்வனவு உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் வழங்கப்படவுள்ளது. மேலும் ஆதன வரியினை செலுத்தாதோர் ஆதன வரியினை முழுமையாக செலுத்தி கழிவுகளை பெற்றுக்கொள்வதுடன், எமது வட்டாரத்தின் அபிவிருத்திக்கு தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்குவதற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

வவுனியா நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கடை வீதி – வட்டாரம் 6 இற்கான நடமாடும் சேவை – 08.05.2024

வவுனியா நகர சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது நடமாடும் சேவையானது வவுனியா பழைய பஸ் நிலைய கட்டடத்தொகுதியில் 08.05.2024 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை வவுனியா நகர சபையினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
குறித்த நடமாடும் சேவையில் நகர சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
குறித்த தினத்தில் நகர சபையினால் வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், வடிகாலமைப்பு சுத்திகரிப்பு வேலைகள், நீரிணைப்பு சேவைகள், கழிவற்றல் சேவைகள், சேதன பசளை விற்பனை, வியாபார உரிமம் வழங்குதல், முச்சக்கர வண்டி உரிமம் வழங்குதல், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல், ஆதன பெயர் மாற்று சேவைகள், ஆதன வரியினை செலுத்துதல், விளம்பர அனுமதிகள், கட்டட அனுமதி வழங்குதல், காணி உப பிரிவிடுகை, நகர சபை பொது சுகாதார பரிசோதகர்களின் சுகாதார ஆலோசனைகள், நாய்ப்பட்டி வழங்குதல், நகர சபைக்கு உரித்தான முறைப்பாடுகளுக்கான தீர்வு வழங்குதல் உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தினத்தில் வருகை தந்த பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, நகர சபையினால், சூசைப்பிள்ளையார்குளம் வீதி வேலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், வீதி விளக்குகளை திருத்தம் செய்வதற்கான கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டதற்கமைவாக, குறித்த தினத்திலேயே 8 வீதி விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டது.
மேலும் பொதுமக்களிடமிருந்து 02 கோரிக்கைகள் கிடைக்கப்பெற்று தற்போது தொடர் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
குறித்த நடமாடும் சேவையின் போது 3 கழிவகற்றல் வாகனங்கள் திண்ம கழிவகற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும், விவசாய நடவடிக்கைகளுக்காக நகர சபையால் தயாரிக்கப்பட்ட 68 கிலோ சேதன பசளையானது குறைந்த விலைக்கு (ரூ.25.00 ) பொது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்ற 48 வியாபார உரிமங்களுக்கான விண்ணப்பங்கள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், 19 விளம்பர உரிமங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நூலக சேவையினை விரிவாக்கும் நோக்கில் 7 நூலக அங்கத்துவ விண்ணப்பங்கள் பரசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு நூலக அங்கத்துவ அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவை நிறைவின் போது 80 இற்கும் அதிகமான பொது மக்கள் வருகை தந்து நகர சபையின் சேவைகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றிருந்த பெரும்பான்மையான கோரிக்கைகள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டது.
வவுனியா நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான மூன்றாவது நடமாடும் சேவையினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு எம்முடன் கைகோர்த்து நின்ற மக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான நடமாடும் சேவைகள் ஏனைய வட்டாரங்களிலும் நடாத்தப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதுடன், நகர சபையின் சேவைகளை திறன்பட வழங்குவதற்கு தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும், பங்களிப்பினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

வவுனியா நகர சபையின் கடை வீதி வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 30.04.2024

வவுனியா நகர சபையின் கடை வீதி வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 08.05.2024
வவுனியா நகர சபையின் கடை வீதி வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 08.05.2024
*****************************************************************
வவுனியா நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே வருகை தந்து வழங்கும் நோக்கில் கடை வீதி வட்டார மக்களுக்கான நடமாடும் சேவையானது நகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நடமாடும் சேவையானது நாளைய தினம் 08.05.2024 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை பழைய பஸ் நிலைய கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு குறிப்பாக இவ்வாண்டிற்கான ஆதன வரி அறவீடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள், நகர சபைக்கு சொந்தமான வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், சேதனப் பசளை விற்பனை ( கிலோ – ரூ.25.00 ), கழிவகற்றும் சேவைகள் மற்றும் மீள் சுழற்சிக்கான கழிவுப்பொருள் கொள்வனவு உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஆதன வரியினை செலுத்தாதோர் ஆதன வரியினை முழுமையாக செலுத்தி கழிவுகளை பெற்றுக்கொள்வதுடன், எமது வட்டாரத்தின் அபிவிருத்திக்கு தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்குவதற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
நன்றி***

உலக ஓட்டிச தினம் 02.04.2024

உலக ஓட்டிச தினம்

 

இன்று உளநல, மனநல மற்றும் மாற்றுதிறனாளர்கள் ஒன்று கூடல் நிகழ்வு. மு.ப. 9.30 மணிக்கு வவுனியா நகரசபை பொதுநூலக ஏற்பாட்டில் நகரசபை திறந்த வெளி அரங்கில் இனிதே இடம்பெற்றது. மிக மிக அற்புதமான படைப்பாளர்களின் கலைப் படைப்புக்களும், அவர்களின் உளப்பாிமாற்றங்களும், வார்த்தைகளில் வடிக்க இயலா அழகிய தருணம்.

வவுனியா நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட குடியிருப்பு – வட்டாரம் 5 இற்கான நடமாடும் சேவை – 27.03.2024

வவுனியா நகர சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது நடமாடும் சேவையானது பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் 27.03.2024 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை வவுனியா நகர சபையினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. குறித்த நடமாடும் சேவையில் வவுனியா மாவட்டத்தின் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகர சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். குறித்த தினத்தில் நகர சபையினால் வீதி திருத்த வேலைகள், விளையாட்டு மைதான புனரமைப்பு வேலை, வீதி விளக்குகள் திருத்தம், வடிகாலமைப்பு சுத்திகரிப்பு வேலைகள், நீரிணைப்பு சேவைகள், கழிவற்றல் சேவைகள், சேதன பசளை விற்பனை, வியாபார உரிமம் வழங்குதல், முச்சக்கர வண்டி உரிமம் வழங்குதல், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல், ஆதன பெயர் மாற்று சேவைகள், ஆதன வரியினை செலுத்துதல், விளம்பர அனுமதிகள், கட்டட அனுமதி வழங்குதல், காணி உப பிரிவிடுகை, நகர சபை பொது சுகாதார பரிசோதகர்களின் சுகாதார ஆலோசனைகள், நாய்ப்பட்டி வழங்குதல், நகர சபைக்கு உரித்தான முறைப்பாடுகளுக்கான தீர்வு வழங்குதல் உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தினத்தில் வருகை தந்த பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, நகர சபையினால், பூந்தோட்டம் – பெரியார் குளம் வீதி திருத்த வேலை மற்றும் பூந்தோட்டம் மைதான புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், வீதி விளக்குகளை திருத்தம் செய்வதற்கான கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டதற்கமைவாக, குறித்த தினத்திலேயே 10 வீதி விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டது.
மேலும் வீதி திருத்த வேலைகள் தொடர்பில், 06 கோரிக்கைகளும், வடிகாலமைப்பு துப்பரவு செய்தலுக்காக 06 கோரிக்கைகளும், குழாய்க்கிணறு திருத்தம் தொடர்பில் 01 கோரிக்கையும் மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்று தற்போது தொடர் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
குறித்த நடமாடும் சேவையின் போது 4 கழிவகற்றல் வாகனங்கள் திண்ம கழிவகற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டதுடன், திண்ம கழிவகற்றல் தொடர்பில் 04 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று கழிவகற்றல் நடவடிக்கைகள் அன்றைய தினத்திலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், விவசாய நடவடிக்கைகளுக்காக நகர சபையால் தயாரிக்கப்பட்ட 262 கிலோ சேதன பசளையானது குறைந்த விலைக்கு (ரூ.25.00 ) பொது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மேலும், பொது மக்களிடமிருந்து 13 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததுடன், அனைத்து முறைப்பாடுகளும் அன்றைய தினமே செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நேரடி கள விஜயத்தின் போது தீர்வு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்ற 22 வியாபார உரிமங்களுக்கான விண்ணப்பங்கள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், நூலக சேவையினை விரிவாக்கும் நோக்கில் 13 நூலக அங்கத்துவ விண்ணப்பங்கள் பரசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு நூலக அங்கத்துவ அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவை நிறைவின் போது 60 இற்கும் அதிகமான பொது மக்கள் வருகை தந்து நகர சபையின் சேவைகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றிருந்த பெரும்பான்மையான கோரிக்கைகள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டது.
மேலும், பூந்தோட்டம் சந்தியில் மக்களின் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக நிர்மாணிக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையும் நகர சபையினால் அகற்றப்பட்டிருந்தது.
வவுனியா நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாவது நடமாடும் சேவையினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு எம்முடன் கைகோர்த்து நின்ற மக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான நடமாடும் சேவைகள் ஏனைய வட்டாரங்களிலும் நடாத்தப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதுடன், நகர சபையின் சேவைகளை திறன்பட வழங்குவதற்கு தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும், பங்களிப்பினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

வவுனியா நகர சபையின் குடியிருப்பு வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 27.03.2024

வவுனியா நகர சபையின் குடியிருப்பு வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 27.03.2024
வவுனியா நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே வருகை தந்து வழங்கும் நோக்கில் குடியிருப்பு வட்டார மக்களுக்கான நடமாடும் சேவையானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர சபையின் இரண்டாவது இந்நடமாடும் சேவையானது வவுனியா நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட குடியிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ள பூந்தோட்டம் சன சமூக நிலையத்தில் 27.03.2024 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை நடாத்தப்படவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் வவுனியா நகர சபையினால் பின்வரும் அனைத்து விதமான சேவைகளும் வழங்கப்படவுள்ளன.
1. ஆதன வரி செலுத்த கூடிய வசதிகள்
2. ஆதன பெயர் மாற்ற சேவைகள்
3. கட்டட அனுமதி வழங்குதல்
4. காணி உப பிரிவிடுகை மற்றும் சேர்ப்பு சேவைகள்
5. வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல்
6. வியாபார உரிமம் வழங்குதல்
7. விளம்பர பலகைகளுக்கான அனுமதி வழங்குதல்
8. துவிச்சக்கர வண்டிகளுக்கான உரிமம் (இலக்க தகடு) வழங்குதல்.
9. முச்சக்கர வண்டிகளுக்கான உரிமம் வழங்குதல்
10. வீதி விளக்குகள் திருத்தம்
11. நகர சபைக்கு சொந்தமான வீதிகள் திருத்தம்
12. நீர் இணைப்பு பெறுவதற்கான அனுமதி வழங்குதல்
13. நகர சபைக்கு சொந்தமான வடிகால்கள் சுத்திகரிப்பு
14. நூலக அங்கத்துவ சேவைகள்
15. கழிவகற்றல் சேவைகள்
16. சேதன பசளை விற்பனை
17. மீள் சுழற்சி கழிவு பொருட்கள் கொள்வனவு
18. நகர சபைக்கு உரித்தான முறைப்பாடுகளுக்கான தீர்வு வழங்குதல்.
19. நகர சபை பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனை சேவைகள்
20. வளர்ப்பு நாய்களுக்கான நாய்ப்பட்டி வழங்குதல்.
குறித்த தினத்தில் எமது சேவைகளை பெற்றுக்கொள்ள தயாராகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதுடன், இது வரை ஆதன வரியினை செலுத்தாதோர் ஆதன வரியினை முழுமையாக செலுத்தி விலை கழிவுகளை பெற்றுக்கொள்ளுமாறும், தங்களது வட்டார அபிவிருத்திக்கு முழுமையான பங்களிப்பினை வழங்கி இந்நடமாடும் சேவையினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தங்கள் ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வவுனியா நகர சபையின் திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறப்பு – 12.03.2024

வவுனியா நகர சபையினால் இன்றைய தினம் 12.03.2024 ஆம் திகதி வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் மரக்கறி விற்பனை சந்தைக்கு முன்பாக திண்ம கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. நகர சபையின் செயலாளர் திரு.இராசையா தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பி.ஏ.சரத்சந்திர அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.த.திரேஸ்குமார், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.எம்.மகேந்திரன், வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.தெ.ரதீஸ்வரன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி Dr.வ.சுரேந்திரன், வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் செயலாளர் திரு.எஸ்.கிருபாகரன், நகர சபை அலுவலர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். குறித்த திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையமானது அரசாங்க அதிபர் திரு.பி.ஏ.சரத்சந்திர அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையமானது வாரத்தின் ஏழு நாட்களும் மு.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை திறந்திருக்கும் என்பதனை அறியத்தருவதோடு, பொது மக்கள் திண்மக்கழிவுகளை குறித்த நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
Translate »