தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வு

வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் ஒக்டோபர் மாதத்தினை தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு தேசிய ரீதியில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா நகரசபையின் அனுசரணையுடன் வவுனியா நகர சபை பொது நூலகத்துடன் இணைந்து தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு ஆற்றல் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன
இதற்கு அமைய இறுதி நாளான இன்று இறுதி நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வாக “உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது ” எனும் தொனிப்பொருளில் நகர சபை செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய வாசிப்புமாத சிறப்பிதழ் ( இதழ் 08 ) வெளியீட்டு வைக்கப்பட்டன.
வவுனியா நகரசபை செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் , கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் , பொது நூலகர், அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்கள் , வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்…

வவுனியா நகரசபையின் பொது நூலகத்தின் தேசிய வாசிப்புமாத நாளும் பரிசளிப்பு விழாவும்

வவுனியா நகரசபையின் பொது நூலகத்தின் தேசிய வாசிப்புமாத நிறைவு நாளும் பரிசளிப்பு விழாவும் சபையின் செயலாளர் தலைமையில் 30.11.2023 ( வியாழக்கிழமை) மு.ப 9.30 மணிக்கு நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா நகர சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான வரைபு பாதீடு பொது மக்களின் பார்வைக்கு

வவுனியா நகர சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான வரைபு வரவு செலவுத்திட்டமானது பொதுமக்களின் பார்வைக்காக 20.11.2023 ஆம் திகதியிலிருந்து 04.12.2023 ஆம் திகதி வரை நகர சபை அலுவலகம், பொது நூலகம் மற்றும் சன சமூக நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த வரவு செலவு திட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்காக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சபைக்குரிய வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால், பொது மக்களாகிய நீங்கள் இவ் வரவு செலவு திட்டத்தினை பார்வையிட்டு தங்களது அபிப்பிராயங்களை செயலாளர், நகர சபை- வவுனியா எனும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ 05.12.2023 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவிக்க இயலும் என்பதனை அறியத்தருகின்றோம்.
————————————————————————-
வருமானம்
**************
சபையின் சொந்த வருமானம் 153,077,831.88
நன்கொடைகள் மற்றும் வருமான மீள் நிரம்பல்கள் 112,353,740.00
மூலதன பெறுகைகள் 5,000,000.00
எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம் 270,431,571.88
செலவீனம்
**************
மீண்டெழும் செலவுகள் 225,281,515.00
மூலதன செலவுகள் 45,150,000.00
எதிர்பார்க்கப்படும் மொத்த செலவீனம் 270,431,515.00

வவுனியா மாநகர சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளம் வெளியீடு

வவுனியா மாநகர சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளம்  பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் 01-11-2-23 வவுனியா மாநகர சபை மண்டபத்தில் வைத்து திறந்து வைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Translate »