தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வு

வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் ஒக்டோபர் மாதத்தினை தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு தேசிய ரீதியில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா நகரசபையின் அனுசரணையுடன் வவுனியா நகர சபை பொது நூலகத்துடன் இணைந்து தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு ஆற்றல் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன
இதற்கு அமைய இறுதி நாளான இன்று இறுதி நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வாக “உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது ” எனும் தொனிப்பொருளில் நகர சபை செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய வாசிப்புமாத சிறப்பிதழ் ( இதழ் 08 ) வெளியீட்டு வைக்கப்பட்டன.
வவுனியா நகரசபை செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் , கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் , பொது நூலகர், அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்கள் , வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »