இன்றைய தினம் (2023-09-22) 2022ம் ஆண்டுக்கான கணக்கறிக்கையிடல் விருதுவழங்கும் நிகழ்வு அனுராதபுரத்திலுள்ள வட மத்திய மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் எமது சபைக்கு வெண்கல விருது கிடைக்கப்பெற்றமையினை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதற்காக கடுமையாக உழைத்த அனைத்து அலுவலர்களுக்கும் எமது சபை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகவங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் (LDSP) திட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் 2024 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைகள் பொதுமக்களின் பங்களிப்புடன் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
வடமாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் பொதுமக்கள் தமது கருத்துக்களை நேரடியாக வழங்குவதற்கு பின்வரும் இரு தினங்கள் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
1வது கூட்டம் : 25.09.2023(திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணி
2வது கூட்டம் : 30.09.2023(சனிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி
இக்காலப்பகுதியில் மீளாய்வு செய்யப்படவுள்ள திட்டங்கள் பொதுமக்களின் பார்வைக்காக உள்ளூராட்சி மன்றங்களின் உப அலுவலகங்கள் மற்றும் நூலகங்களில் காட்சிப்படுத்தப்படும். அவற்றினை பார்த்து பொதுமக்கள் தமது கருத்துக்களை எழுத்துமூலமாகவும் உரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கமுடியும்.
இறுதி செய்வதற்கான கூட்டம் : 06.10.2023(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி
நகரசபையினால் தயாரிக்கப்படும் சேதனப் பசளை (Compost) மக்கள் நலனை கருத்திற்கொண்டு தற்போது விலை குறைக்கப்பட்டு 1 கிலோ ரூபா 25 இற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பதுடன், இதனை எமக்கு சொந்தமான வேப்பங்குளத்தில் அமைந்துள்ள எமது திண்மக்கழிவகற்றல் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.பொதுமக்களும், விவசாயிகளும் மொத்தமாகவும் சில்லறையாகவும் தங்களுக்குத் தேவையான சேதனப் பசளையினை இங்கு பெற்றுக் கொள்ள முடியும்.


வவுனியா, முல்லைத்தீவு ,மன்னார் ஆகிய மாவட்டத்தில் உள்ள பிரதேச , நகர சபைகளுக்கான LDSP திட்ட முன்மொழிவு தயார்நிலைப்படுத்துதல் , Project Completion Report format and revised ESSR Format தயாரித்தல் தொடர்பான பயிற்சி கலந்துரையாடல் பொறியியலாளர் நவரத்ன வாலிசுந்தர (ஆலோசகர் –E&S) PCU-LDSP, Colombo அவர்களால் வவுனியாவில் பிராந்திய உள்ளுராட்சித் திணைக்களத்தில் 7ஆம் திகதி இன்று நடைபெற்றது. அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.