Provincial Best Anual Reports & Accounts/Performance Reports Awards Competition 2023

இன்றைய தினம் (2023-09-22) 2022ம் ஆண்டுக்கான கணக்கறிக்கையிடல் விருதுவழங்கும் நிகழ்வு அனுராதபுரத்திலுள்ள வட மத்திய மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் எமது சபைக்கு வெண்கல விருது  கிடைக்கப்பெற்றமையினை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதற்காக கடுமையாக உழைத்த அனைத்து அலுவலர்களுக்கும் எமது சபை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2023/2024 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

உள்ளூர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2023 / 2024 காலப்பகுதிகளுக்காக அடிப்படை பரிமாற்றம் (BT 4) மற்றும் செயற்றிறன் பரிமாற்றத்தின் (PT 3) இன் கீழ் செயற்படுத்தப்படவுள்ள முன்னுரிமைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கீழ்வரும் விபரங்களை பார்வையிட்டு மேற்படி வேலைத்திட்டங்களை பார்வையிட்டு இத்திட்டங்கள் தொடர்பில் ஆட்சேபனைகள் மற்றும் உங்கள் கருத்துக்களை எதிர்வரும் 25.09.2023 மற்றும் 30.09.2023 ஆகிய தினங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபா மண்டபத்தில் எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் கலந்துரையாடலில் தெரிவிக்க முடியும் என்பதனை அறியத்தருகின்றோம்.
இதில் பொதுமக்களையும்; பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள்;, விசேட தேவையுடையோர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் தவறாது கலந்து கொண்டு, பிரதேச அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டம் மீளாய்வு செய்தல்

உலகவங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் (LDSP) திட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் 2024 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைகள் பொதுமக்களின் பங்களிப்புடன் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
வடமாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் பொதுமக்கள் தமது கருத்துக்களை நேரடியாக வழங்குவதற்கு பின்வரும் இரு தினங்கள் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
1வது கூட்டம் : 25.09.2023(திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணி
2வது கூட்டம் : 30.09.2023(சனிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி
இக்காலப்பகுதியில் மீளாய்வு செய்யப்படவுள்ள திட்டங்கள் பொதுமக்களின் பார்வைக்காக உள்ளூராட்சி மன்றங்களின் உப அலுவலகங்கள் மற்றும் நூலகங்களில் காட்சிப்படுத்தப்படும். அவற்றினை பார்த்து பொதுமக்கள் தமது கருத்துக்களை எழுத்துமூலமாகவும் உரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கமுடியும்.
இறுதி செய்வதற்கான கூட்டம் : 06.10.2023(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி

🌏உலக தூய்மைப்படுத்தல் தினம்-2023

🌏உலக தூய்மைப்படுத்தல் தினத்தினை முன்னிட்டு 15.09.2023 ஆம் திகதி எமது சபையினால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளை சேகரித்து சுற்றாடலை தூய்மையாக்கும் செயற்றிட்டம் எமது சபையினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
👉இத்தூய்மையாக்கும் பணியில் எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் இணைந்து தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். 🌷🌷
🌷அந்த வகையில் 15.09.2023 திகதி வெள்ளிக்கிழமை வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியிலிருந்து தாண்டிக்குளம் யு9 வீதி வரையுள்ள வீதியின் இருபுறமும் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகள் எமது சபை கழிவகற்றல் வாகனங்களில் தரம்பிரித்து சேகரிக்கப்பட்டன.
🌷இப்பணியில் சமூகப்பொறுப்புணர்வுடன் பங்கெடுத்த அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் சபை சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
🎄பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனையைக் குறைத்து பொறுப்புடன் சூழல் நலம் காப்போம்🌏

Translate »