வவுனியா நகர சபையினால் சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்திருந்த வீதியோர வியாபாரங்கள் அகற்றப்பட்டமை தொடர்பான அறிவித்தல்










வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியிலும் பொதுச்சந்தையினை அண்மித்தும் அமைந்திருந்த வீதியோர மரக்கறி வியாபாரங்களால் அண்மைக்காலமாக மக்களின் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்ததுடன், அப்பகுதிகளில் தொடர்ச்சியாக வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமையினை கருத்திற்கொண்டும், குறித்த வியாபாரிகளால் பொது மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கழிவு நீர் வடிகாலமைப்பிற்கு அருகில் மரக்கறி வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தமையினை கருத்திற்கொண்டும், மேலும் இவ்விடயம் தொடர்பில், பொது மக்களிடமிருந்தும், சமூக ஆர்வலர்களிடமிருந்தும் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வந்த முறைப்பாடுகளுக்கமைவாகவும் குறித்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி அனுமதியற்ற முறையில் இயங்கி வந்த தற்காலிக வீதியோர மரக்கறி வியாபாரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவருகின்றன.
இனிவரும் காலங்களில் மக்களின் பொதுப்போக்குவரத்து மற்றும் பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலினை விளைவிக்கும் வகையில் செயற்படும் அனைத்து வீதியோர வியாபாரங்கள் தொடர்பில் நகர சபையினரால் தொடர் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், குறித்த வியாபாரங்களுக்கு எதிராக நகர சபை கட்டளை சட்டத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.