அண்மைக்காலமாக எமது பிரதேசங்களில் இரவு மற்றும் பகல் வேளைகளில் வீதிகளில் நடமாடும் கால்நடைகள் காரணமாக அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமையினால் விலை மதிப்பற்ற மனித உயிர்களும் கால்நடைகளும் காவு கொள்ளப்படுவது மிகவும் வருந்தத்தக்க
விடயமாகும். வவுனியா மாவட்டத்தில் கட்டாக்காலி கால்நடைகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பல விபத்துக்கள் அதிகளவு இடம்பெறுவதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வரும் நிலையில் நகர சபைக்கு உரித்தாக்கப்பட்ட அதிகாரங்களை
கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆகவே, கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை உரிய வகையில் பராமரிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இவ்வாறான கால்நடைகளை கட்டுப்படுத்தும் நகர சபையின்
நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவ்வாறு இரவு வேளைகளில் நடமாடும் கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்படும் பட்சத்தில் இதற்கான தண்டப்பணம் மற்றும் பராமரிப்புச்செலவு
என்பன விதிக்கப்படும் என்பதுடன், கால்நடை உரிமையாளர்கள் கட்டணங்களை செலுத்தி உரிய காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளத்தவறின் குறித்த கால்நடைகள் ஏல விற்பனை மூலம்
விற்பனை செய்யப்படும் என்பதனையும் மன வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
கட்டண விபரம் வருமாறு: –
கட்டாக்காலி மாடு பிடி கூலி ரூபா 1,000.00
தண்டம் ரூபா 1,000.00
நாளொன்றிக்கான பராமரிப்புச்செலவு ரூபா 500.00