உலக மண் தினத்தினை முன்னிட்டு மண் வளத்தினை பாதுகாப்பதற்கான விழிப்பணர்வினை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்குடன் வவுனியா மாவட்டத்தில் இயங்கும் அரச திணைக்களங்களுடன் இணைந்து நகர சபையினால் வவுனியா நகரப்புற பகுதிகளில் சுற்றாடலில் காணப்பட்ட எமது மண் வளத்திற்கு தீங்கினை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
தற்போது பயணங்களின் போது அதிகளவான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையானது அதிகரித்துச்செல்வதனை அவதானிக்க முடிகின்றது. அவை மண் வளத்திற்கும் சுற்று சூழலுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தாதவாறு மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடியவாறு அகற்றுதல் அவசியமான ஒன்றாகும். இது தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக வவுனியா பதிய பேருந்து நிலையத்தின் ஊடாக பயணத்தினை முன்னெடுக்கும் பேருந்துகளில் பயணம் செய்யவிருந்த பயணிகளுக்கு பேருந்து பயணத்தின் போதான கழிவகற்றல் பாவனைக்காக கழிவகற்றல் பைகள் வழங்கப்பட்டு பயணிகள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வினை ஊட்டும் நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் அவர்களுடன் இணைந்து நகர சபை செயலாளர், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.