வவுனியா நகரசபையின் பொதுநூலகம் நடாத்தும் நடமாடும் நூலக சேவைக்கான புதிய பேரூந்து இன்றைய தினம் (01.08.2024)சேவையினை ஆரம்பித்திருந்தது.
தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் மாணவர்கள் சிறுவயது முதல் நூல்களில் ஆர்வம் காட்டும் வகையில் ஊக்குவிப்பினை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு
நடாத்தப்பட்டது.
சபையின் செயலாளர், நூலகர்,நூலக உத்தியோகத்தர் ஊழியர்கள் , சமாதான முன்பள்ளியின் சிறார்களோடு இனிதே இதனை ஆரம்பித்து வைத்தனர்.
மிக்க மகிழ்வோடு சிறார்கள் நூல்களை பார்வையிட்டதோடு, உரையாடியும், கதைகூறியும், விளையாடியும் மகிழ்ந்தனர்.










