வரவு செலவு திட்டத்திற்கான முன்மொழிவுகள் பெறல் – 2025

2025 ஆம் ஆண்டிற்கான வவுனியா நகர சபையின் வரவு செலவு திட்டத்தினை தயாரிப்பதற்கான மக்கள் பங்கேற்பு கலந்துரையாடல்கள் தற்போது வட்டார ரீதியாக இடம்பெற்று வருகின்றது. இக்கலந்துரையாடல்கள் ஊடாக 2025 ஆம் ஆண்டில் சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பான முன்மொழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

இக்கலந்துரையாடல்களில் பங்குபற்ற இயலாதோர் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை Google Form ஊடாக சமர்ப்பிப்பதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கீழ்த்தரப்பட்டுள்ள இணைப்பினை ( Link ) கிளிக் செய்வதன் மூலம் தங்கள் வட்டாரங்களுக்கான அபிவிருத்தி வேலைகளுக்கான முன்மொழிவுகளை எதிர்வரும் 31.08.2024 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்பதாக எமக்கு சமர்ப்பிக்க முடியும் என்பதனை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்.