வவுனியா நகர சபையின் கடை வீதி வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 30.04.2024

வவுனியா நகர சபையின் கடை வீதி வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 08.05.2024
வவுனியா நகர சபையின் கடை வீதி வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 08.05.2024
*****************************************************************
வவுனியா நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே வருகை தந்து வழங்கும் நோக்கில் கடை வீதி வட்டார மக்களுக்கான நடமாடும் சேவையானது நகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நடமாடும் சேவையானது நாளைய தினம் 08.05.2024 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை பழைய பஸ் நிலைய கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு குறிப்பாக இவ்வாண்டிற்கான ஆதன வரி அறவீடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள், நகர சபைக்கு சொந்தமான வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், சேதனப் பசளை விற்பனை ( கிலோ – ரூ.25.00 ), கழிவகற்றும் சேவைகள் மற்றும் மீள் சுழற்சிக்கான கழிவுப்பொருள் கொள்வனவு உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஆதன வரியினை செலுத்தாதோர் ஆதன வரியினை முழுமையாக செலுத்தி கழிவுகளை பெற்றுக்கொள்வதுடன், எமது வட்டாரத்தின் அபிவிருத்திக்கு தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்குவதற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
நன்றி***
Translate »