2025 ஆம் ஆண்டுக்கான கேள்வி அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான கேள்வி அறிவித்தல்

வவுனியா நகரசபை அதிகார எல்லைக்குட்பட்ட கீழ்காணும் குத்தகை நிலையங்களை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம்; திகதி தொடக்கம் 2025 டிசெம்பர் 31 ஆம் திகதி வரை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விகள் கோரப்படுகின்றன.
கேள்விப்பத்திரம் வழங்கும் காலம் :- 07.11.2024 – 19.11.2024 ( மு.ப 9.00 -பி.ப.-2.30 வரை)
கேள்விப்பத்திரம் ஏற்கும் இறுதித்திகதி :- 21.11.2024 மு.ப.11.00 மணி வரை
கேள்விப்பத்திரம் திறக்கப்படும் திகதி :- 21.11.2024 மு.ப. 11.00.
கேள்விப்பத்திரம் திறக்கப்படும் இடம் :- நகரசபை மண்டபம்
கேள்வி படிவக்கட்டணமாக ரூபா 3000.00 ம் , அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மீளளிக்கக்கூடிய வைப்புத் தொகையினையும் செலுத்தி படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
கேள்விப்பத்திரங்கள் மூலப்பிரதி மற்றும் நகல்பிரதி என இரண்டு பிரதிகள் தனித்தனியான உறைகளில் இடப்பட்டு, இரண்டையும் ஒரு கடித உறையிலிட்டு அரக்கு முத்திரை இடப்பட்டு ‘செயலாளர் , நகரசபை ,வவுனியா’ என்ற முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அல்லது சபையில் வைக்கப்பட்டுள்ள கேள்விப்பெட்டியில் இடப்படல் மூலம் 2024.11.21 ம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு முன் கிடைக்கப்பெறல் வேண்டும். கேள்விப்படிவங்கள் அடங்கிய கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கேள்விகோரும் நிலையத்தின் பெயர் குறிப்பிடப்படல் வேண்டும்.
மேற்படி கேள்வி கோரப்படும் நிலையங்களுக்குரியதான வியாபாரங்கள் யாவும் குறித்த இடத்திலேயே நடாத்தப்பட வேண்டும் என்பதுடன் தற்போதைய வசதிகள் மற்றும் நிலைமையின் அடிப்படையிலேயே கேள்வி கோரப்படுகிறது கேள்வியினை ஏற்க அல்லது நிராகரிக்கும் உரிமை நகரசபைக்குண்டு. மேலும், இக்கேள்விகள் சம்பந்தமாக மேலதிக விபரங்களை எமது அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தொலைபேசி இல: 0242222275. அல்லது 0242225050 உடன் தொடர்பு கொள்ள முடியும்.
செயலாளர்
நகரசபை,
வவுனியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »