பெறுகைகள் அறிவித்தல் – பாதுகாப்புச்சேவை 2025

பெறுகைகள் அறிவித்தல் – பாதுகாப்புச்சேவை 2025
பாதுகாப்புச் சேவை வழங்கல் – 01.01.2025 -31.12.2025
மதிப்பீடு – 27 Nos
மீளளிக்கப்படாத வைப்புத்தொகை (ரூபா) – 3000.00
மீளளிக்கப்படும் வைப்புத்தொகை (ரூபா) – 150,000.00
பெறுகை ஆவணங்கள் 07.11.2024 ஆம் திகதி தொடக்கம் 25.11.2024 ஆம் திகதி வரை அலுவலக கடமை நேரத்தில் காலை 9.00 மணி முதல் பி.ப 2.30 மணி வரை வவுனியா நகரசபையின் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பெறுகைப் படிவங்கள் அனைத்தும் இரு பிரதிகளில் மூலப்பிரதி, நகல் பிரதி எனக் குறிப்பிட்டு அனுப்பப்படல் வேண்டும்.
சகல முத்திரையிடப்பட்ட பெறுகைகளும் ‘தலைவர், பெறுகைகள் குழு, நகரசபை, வவுனியா’. என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அல்லது நகரசபையின் செயலாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கேள்விப்பெட்டியில் இடப்படுவதன் மூலம் 26.11.2024 மு.ப 10.30 மணிக்கு முன்னர் கிடைக்கப்பெறல் வேண்டும்.
கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் ‘பாதுகாப்புச் சேவை 2025’ என குறிப்பிடல் வேண்டும். பெறுகைகள் வைப்புத் தொகையை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டின் பிரதியை பெறுகைப் பத்திரத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
கேள்வி கோரல் பற்றிய முன்கூட்டிய கூட்டம் 12.11.2024 ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு வவுனியா நகரசபை அலுவலகத்தில் நடைபெறும். ஆர்வமுள்ள கேள்விதாரர்கள் கலந்துகொள்ளலாம். இதற்கு எதுவித கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது.
பெறுகை நேரம் முடிவடைந்தவுடன் பெறுகைப்பத்திரங்கள் 26.11.2024 மு.ப 10.30 மணிக்கு திறக்கப்படும். விண்ணப்பதாரரோ அல்லது எழுத்து மூலம் நியமிக்கப்பட்ட பிரதிநிதியோ பெறுகைகள் திறக்கும் போது சமூகமளிக்கலாம். கேள்வி கோரல்களை இரத்து செய்யவோ, நிறுத்தி வைக்கவோ, பகுதியாக வழங்குவதற்கோ, புதிதாகக் கோருவதற்கோ வவுனியா நகரசபைக்கு பூரண அதிகாரமுண்டு. பெறுகை தொடர்பான பெறுகைக் குழுவின் தீர்மானமே இறுதித் தீர்மானமாகும். மேலதிக விபரங்களை 024-2225050 அல்லது 024-2222275 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
செயலாளர்
நகரசபை,
வவுனியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »