2025 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களையும் ஒப்பந்தகாரர்களையும் பதிவுசெய்தல்
வவுனியா நகரசபையானது 2025 ஆம் ஆண்டுக்காக கீழ் குறிப்பிடப்பட்ட பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகளை வழங்குவதற்கு தம்மை பதிவு செய்து கொள்ள விரும்பும் வழங்குநர்கள், உற்பத்தியாளர்கள், ஒப்பந்தகாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் சேவையாளர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. விண்ணப்பப் படிவங்களை மீளளிக்கப்படாத வைப்புப் பணமாக ரூபா 1000.00 ஐ காசுக்கட்டளை ‘செயலாளர், நகரசபை வவுனியா’ என்ற பெயரில் அல்லது மக்கள் வங்கி, வவுனியா – கணக்கு இலக்கம் 040-100-101640520 இற்கு வைப்புச் செய்தல் அல்லது எமது அலுவலகத்தில் அலுவலக நாட்களில் 07.11.2024 முதல் 29.11.2024 வரை (மு.ப 9.00 மணி முதல் பி.ப 2.30 மணிவரை) பணத்தினை நேரடியாக செலுத்துவதன் மூலம் உரிய பற்றுச்சீட்டை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
2. விண்ணப்ப படிவங்களை கீழ்குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிக்கமைவாக யு4 தாளில் தயாரித்து பணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டினை இணைத்தனுப்புவதன் மூலமும் பதிவினை மேற்கொள்ளமுடியும்.
3. பதிவுக்கான விண்ணப்பங்கள் யாவும் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளான வியாபாரப்பதிவுச் சான்றிதழ் (பிரதேச செயலகம்), வியாபார அனுமதிப்பத்திரம் (மாநகரசபை/ நகர சபை/ பிரதேச சபை) மற்றும் வரிப்பதிவுச் சான்றிதழ் (உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் ) என்பவற்றுடன் அனுப்பிவைக்கபடல் வேண்டும்.
4. கேள்வி கோரல்களில் பதிவு செய்யப்பட்ட வழங்குநர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆயினும், போதிய பதிவு செய்யப்பட்ட வழங்குநர்கள் இல்லாத நிலையில் போட்டித்தன்மையினை கருத்தில் கொண்டு பிற மூலங்களின் ஊடாகவும் கேள்வி கோரல்களை பெற்றுக்கொள்ளவும் நகரசபை அதிகாரத்தினை கொண்டுள்ளது.
5.விண்ணப்பப் படிவங்களை நேரடியாகவோ அல்லது செயலாளர், நகரசபை, வவுனியா என்ற முகவரிக்கு தபால் மூலமோ 03.12.2024ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறல் வேண்டும்.
6. பதிவுகள் 2025 ஆம் ஆண்டிற்கு மட்டும் செல்லுபடியானதாகும்.
7. பதிவிற்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் அல்லது திருப்திகரமற்ற விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை நகரசபைக்கு உண்டு.
8. வடமாகாணத்தில் குறைந்தது ஒர் இடத்திலேனும் நிறுவனத்தின் ஒரு கிளை / ஒரு காட்சி அறை / அங்கீகரிக்கப்பட்ட முகவர் எதேனும் இருத்தல் வேண்டும்.
9. மேலதிக விபரங்களை அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தொலைபேசி :- 024-2222275 / 024-2225050
மின்னஞ்சல் :- ucvavuniya@yahoo.com
இணையத்தளம் :-vavuniya.uc.gov.lk
செயலாளர்,
நகரசபை,
வவுனியா.
06.11.2024