" பொது நூலகத்திற்கும் அலுவலகத்திற்கும் வருகை தரும் செவிப்புலனற்றோருக்கான சேவை வழங்குதல்" எனும் குறிக்கோளிற்கமைய சைகை மொழி தொடர்பான அறிமுகக் கருத்தரங்கு எமது நகரசபை மண்டபத்தில் 04.09.2023 இன்று இடம்பெற்றது . இந் நிகழ்விற்கு வளவாளராக மாகாண சமூக சேவைத்திணைக்களம் வடக்கு மாகாணத்தில் இருந்து சைகைமொழிபெயர்ப்பாளர் செல்வி .சி.சஜித்தா அவர்கள் கருத்துரையையும் செய்கை வழியினையும் வழங்கி சிறப்பித்தார். இதில் எமது பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களும், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அத்துடன் எமது நகரசபையின் செயலாளர் மற்றும் ஏனைய பிரதேச சபை நூலகர்கள் ,உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் ,நகரசபை நூலக உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து பயிற்சி பெற்றனர். அனைவருக்கும் மிகச்சிறந்ததொரு புது முயற்சியாகவும், வழிகாட்டியாகவும் இந்நிகழ்வு அமையப் பெற்றது.