வவுனியா நகரசபை பொது நூலகத்தினால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (08.03.2024) இன்று 07.03.2024 வ/சைவபிரகாச மகளிர் கல்லூரி உயர்தர மாணவர்களிற்கு இலவச நூலக அங்கத்துவமும். பெண்ணியம் தொடர்பான நூல்கள் அறிமுக கண்காட்சியும் இடம்பெற்றது. இந்நிகழ்வினை நடத்துவதற்கு ஊக்கமளித்த சபையின் செயலாளர் அவர்களிற்கும். ஒழுங்கு படுத்தி வழங்கிய பாடசாலை அதிபர், பிரதி அதிபர் , நூலக பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு. மற்றும் கலந்து சிறப்பித்து ஆர்வத்தோடு இலவச அங்கத்துவங்களைபெற்று (61) அதன் பயன்பாடு பற்றிய விளக்கங்களை தெளிவுடன் கேட்டு அக்கறையோடு நடந்துகொண்ட மாணவர்களையும் வாழ்த்துவதோடு. இதன் பயன் மேலும் நடமாடும் சேவைகளை நடாத்த தூண்டும் வகையில் மிகச் சிறந்த தருணமாக அமையப் பெற்றமை மகிழ்வளிக்கின்றது.